(க.ஜெகதீஸ்வரன்)
கல்குடா வலயக்கல்வி அலுவல நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் 'முத்தாரம்' இசை, நடன நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) வெகு சிறப்பாக நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கல்வி அமைச்சின் இணைப்பாடவிதானம் மற்றும் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், அழகியல் பிரிவிற்கான பணிப்பாளர் வருண அழகக்கோன் மற்றும் முன்னைநாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம், நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் நிருவானத்திற்கான பிரதிக்கல்வி பணிப்பாளருமான திருமதி. எம்.ஏ.றிஸ்மியாபாணு, மற்றும் முகாமைத்துவத்த்குப் பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.தயாளசீலன், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், கணக்காளர் வே.வேல்ராஜசேகரம், நடனத்திற்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி.சு.நிரஞ்சன் ஆசிரிய ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள், பெற்றார்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

