(க.ஜெகதீஸ்வரன்)
இலங்கை நாட்டின் ஜனநாயக அரசியல் பாரம்பரியங்களை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக் காலத்திலேயே அறிமுகப்படுத்துவதும் சிறந்த அரசியல் தலைவர்களை பாடசாலைக் காலத்திலேயே உருவாக்குவதும் இதன் பிரதான நோக்கமாகும். அதனூடாக பாராளுமன்ற நடைமுறைகளின் ஊடாக தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்களிப்பது எப்படி, வாக்குச்சாவடியினுடைய அமைப்பு, வாக்களிக்கும் முறைமை, வாக்கெண்ணல், பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் போன்ற ஜனநாயகப் பண்புகளை மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு குறித்த தேர்தல் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தேர்தல் ஆணையாளராகவும் பாடசாலையின் ஆசிரியர்கள் சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள், தேர்தல் நோக்குனர்களாகவும் மாணவர்கள் வேட்பாளர்களாகவும் பங்குபற்றியிருந்தனர். குறித்த தேர்தலினூடாக நடைமுறை அரசியலைக் கற்றுக் கொள்வதும் சிறந்த தலைமைத்துவத்தை பாடசாலையினூடாக வழங்குவதுமே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
