(க.ஜெகதீஸ்வரன்)
புதிய ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01ஆம் திகதி வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர்; தருமரெத்தினம் அனந்தரூபன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளை ஆரம்பிக்குமுகமாக காலை 8.30 மணிக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தேசியகொடியை ஏற்றி வைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அரசாங்கத்தின் புதுமையான திட்டங்களான வறுமையை தணித்தல், டிஜிட்டல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருக்களை உள்ளடக்கிய சிறப்புரையினை வலயக்கல்விப் பணிப்பாளர் நிகழ்த்தினார்.
பின்னர் அலுவலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் கல்குடா கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் வருடங்களில் கல்வி அடைவு மட்டத்தை தேசிய மட்டத்தில் உயர்த்துவதற்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டார். அத்துடன் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள்; உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டதுடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.