(ஷோபனா)
கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராகப் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற வி.கணேசமூர்த்திக்கான பிரியாவிடை வைபவம் கடந்த 12.07.2024ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் வலயக்கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் தலைமைiயில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் , ஆசிரிய ஆலோசகர்கள், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.அமீர், நிதி உதவியாளர் திருமதி.பத்மலோஜினி லிங்கேஸ்வரன், சிரேஸ்ட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்திருந்தனர்.
அவர் ஆற்றிய சேவைகள் தொடர்பில் பலரும் பாராட்டி உரையாற்றினர். பிரதான நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு வி. வி.கணேசமூர்த்தியின் ஏற்புரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
