(ஷோபனா ஜெகதீஸ்வரன்)
ஆரம்பபிரிவிற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் க.யோகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் முஹம்மது அபூபக்கர் றிஸ்மியா பாணு, கணக்காளர் வி.கணேசமூர்த்தி, நிதி உதவியாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன், மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான, திருமதி.ஈ.வீ.கனகரெட்ணம், தனலக்சுமி தருமராஜா, திருமதி.சௌ.அருளேந்திரன் திருமதி.கே.ரவீந்திரகுமார், ஏ.சந்திரகாந்தன், திருமதி.கே.கமலநாதன், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
03 கோட்டங்களிலும் மொழித்திறன் மற்றும் 100 சதுர கணித்தல் போட்டி நிகழ்வுகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்திய மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.