(க.ஜெகதீஸ்வரன்)
வாழைச்சேனை- கல்குடா கல்வி வலயத்தில் இன்று திங்கட்கிழமை (23) வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், தாபன மற்றும் பொதுமுகாமைத்துவத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர்
க.ஜெயவதனன், கணக்காளர் வி.கணேசமூர்த்தி உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வாணிவிழாவின் சிறப்பு பற்றி விஞ்ஞானத்திற்கான ஆசிரிய ஆலோசகர் கார்த்தீபன், சிறப்பு சொற்பொழிவாளர் வேல் சசிதரன் ஆகியோர் உரையாற்றினர்.
வலய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.