(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 200 சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களினால் கையொப்பம் இடப்பட்ட மகஜர்கள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ரி.அனந்தரூபன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தயாநந்தி திருச்செல்வம், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.அமலினி, வாழைச்சேனை பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தராஜா ஆகிய அதிகாரிகளிடம் மனு கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜர் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை வேள்ட் விஷன் முகாமையாளர் அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன், வாழைச்சேனை வேள்ட் விஷன் அபிவிருத்தி இலகுபடுத்தினர் திருமதி.கரோலினா றாகல் மற்றும் தொழில்முறை உளவியல் ஆலோசனை மையம் திறன் அபிவிருத்தி இலகுபடுத்தினர் மரியதாசன் சூசைதாசன் எனப் பலரும்கலந்து கொண்டார்கள்.