(ஜெ.ஜெய்ஷிகன்)
கடந்த 25.26.02.2023 ஆகிய திகதிகளில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் திருகோணமலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கக் குழுப் போட்டியில் மட். ககு. வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலயத்தின் 11 வயது ஆண்கள் குழு முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
குறித்த போட்டி நிகழ்வில் 11 வயது பெண்கள் குழு மூன்றாம் இடத்தினையும், 9 வயது ஆண்கள் குழு ஐந்தாம் இடத்தினையும் 9 வயது பெண்கள் குழு ஆறாம் இடத்தினையும் பெற்றுள்ளதோடு, நான்கு குழுக்களும் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.