(கல்லடி விசேட நிருபர்)
"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி திருமதி.சசிகலாராணி ஜெயராம் தலைமையில் நேற்றைய தினம் 19.02.2023 திகதி ஞாயிற்றுக்கிழமை ப சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய "சதங்கை நாதாம்ருதம் - 02" நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அத்தோடு நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி.புளோரன்ஸ் பாரதி கெனடி, பிரதேச செயலாளர்கள், சிரேஸ்ட நடனத்துறை ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது "கலார்ப்பணம்" நூல் அதன் ஆசிரிரியர் திருமதி.சசிகலாராணி ஜெயராம் அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டு அதன் முதற்பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது "கல்லூர் பெருவலம்" எனும் பல்திறன் இறுவெட்டு வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், பிரதேச பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன், "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தினை திறம்பட வழிநடாத்திவரும் நாட்டிய நிலையத்தின் இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி திருமதி.சசிகலாராணி ஜெயராம் அவர்களுக்கும் அவரது கணவருக்குமான கௌரவிப்பு
நிகழ்வும் இடம்பெற்றது.
"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் மாணவர்களினால் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன்,
இந்நிகழ்வில் "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.