(ஷோபனா ஜெகதீஸ்வரன்)
கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் இன்று புதன்கிழமை (18) காலை 9.49 சுபவேளையில் உத்தியோகத்தர்கள் புடைசூழ அமோக வரவேற்புடன் தனது கடமை பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
நிர்வாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளரின் பாரியார், மேற்கு வலய அதிகாரிகள் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ரபீக் றிஸ்மியா பாணு, க.ஜெயவதனன், ச.தட்சணாமூர்த்தி, நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம்.பாறுக், கணக்காளர் வி.கணேசமூர்த்தி மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு புதிய வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஞான விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதன் பின்னர் சுபவேளையில் தனது கடமை பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
வரவேற்பு நிகழ்வின் பின்னர் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற உத்தியோகத்தர்களுடனான கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் உரையாற்றிய போது கல்குடா கல்வி வலயமும் உத்தியோகத்தர்களும் எனக்கு புதியவர்கள் அல்ல, பரீட்சயமானவர்களே, நாம் எல்லோரும் இணைந்து வலயத்தின் கல்வி அபிவிருத்தியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்ததுவதற்கான நடவடிக்கைகளை முன் கொண்டு செல்வோம்; எனத் தெரிவித்தார்.