(ஷோபனா ஜெகதீஸ்வரன்)
வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களால் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காகவும் உயிர்நீத்த அனைவருக்காகவும் இறைவணக்கம் செய்யப்பட்டது. அத்துடன் இந்நாட்டின் மக்களுக்காக சேவையாற்றவென ஒன்றிணைந்த பணியாளர்கள் என்ற வகையில் இன, மத, மொழி, கடந்து அனைவருக்காகவும் நேர்மையுடனும் வினைத்திறனுடனும் ஆற்றி வரும் கடமைகளை மலர்ந்துள்ள புதிய ஆண்டில் புத்துணர்வுடனும். திறன்பட கொண்டுசெல்வதற்கான சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்து வலயக்கல்விப் பணிப்பாளர் தனதுரையில் கல்குடா கல்வி வலயத்தின் கல்வி வெளியீடுகள் சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றது. நிருவாக ரீதியிலான செயற்பாடுகள் கல்விசாரா உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் பாராட்டுக்குரியது. இவ் வெற்றிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள் , மாணவர்கள் , சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் , உதவிக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது.
பின்னர் நிருவாக உத்தியோகத்தர் எச்.எம்.எம்.பாறுக் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ச.கங்கேஸ்வரன்,அபூபக்கர் றிஸ்மியா பாணு, எஸ்.துஸ்யந்தன், கே.ஜெயவதனன், கணக்காளர் வி.கணேசமூர்த்தி ஆகியோர்களின் உரை இடம் இடம்பெற்றது. பின்னர் கல்வி மற்றும் நிருவாக ரீதியனாலான அபிவிருத்தி தொடர்பிலும் இவ்வருட செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாற்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.