LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 16, 2022

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

 மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் நடாத்தும் ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படும் மற்றுமொரு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (11) திகதி நொச்சிமுனையில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. 

ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களுக்கு முதற்தொகுதியாக 20 பேருக்கான பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இவ் மூன்று நாள் பயிற்சியை தொடர்ந்து இன்னும் இரண்டு தொகுதிகளாக மொத்தமாக 60 ஊடகவியலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படும் வன்முறைத்தீவிரவாத எண்ணங்கள், சமூகஊடகங்களின் பிழையான பயன்பாடுகளை குறைத்தல் போன்றவற்றை முன்னெடுக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், HELVETAS நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் என்.ரமேஷ்,  மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், மனிதநேய தகவல் குறிப்பு (மதகு) பணிப்பாளர் சபை அங்கத்தவர் எபனேசர் தர்சன், LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன், LIFT நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் வீ.கண்ணன், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வளவாளர்களாக பெண் மனித உரிமை செயற்பாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான நளினி ரெட்ணராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் ஆகிய இருவரும் கலந்துகொண்டு சிறந்த முறையில் வளவாண்மை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





 












 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7