மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து 38 வருட காலமாக இலங்கையின் பாடசாலை முறைமையினுள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்தவும் அதற்கான அங்கீகாரத்
தை சமூகமயப்படுத்தவும் முத்திரையொன்றின் வெளியீடும் மற்றும் இலங்கையிலுள்ள முக்கிய மதங்களில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி கற்பிக்கப்படுகின்ற போதனைகளை உள்ளடக்கி அச்சிடப்பட்ட சர்வ சமய நூலின் அங்குரார்ப்பண விழாவும் பத்தரமுல்லையில் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தை சமூகமயப்படுத்தவும் முத்திரையொன்றின் வெளியீடும் மற்றும் இலங்கையிலுள்ள முக்கிய மதங்களில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி கற்பிக்கப்படுகின்ற போதனைகளை உள்ளடக்கி அச்சிடப்பட்ட சர்வ சமய நூலின் அங்குரார்ப்பண விழாவும் பத்தரமுல்லையில் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கௌரவ வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் இவ் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆலோசகர் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணியான கலாநிதி ஜெகத் குணவர்த்தன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு. எஸ்.அமரசிங்க உள்ளிட்ட சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
இதற்கு மேலதிகமாக, இலங்கை தபால் திணைக்களத்தின் தபால்மா அதிபர் உள்ளிட்ட முத்திரை வெளியீட்டு பணியகத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுடன் முக்கியமான நான்கு மதங்களிலுள்ள சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை எமுத்துருவில் வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், சுற்றாடல் முன்னோடிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஊடக துறையினரும் இப்பெருவிழாவில் பங்கேற்றனர்.
சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் என்பது இலங்கையில் பாடசாலை முறைமையினுள் நடைமுறைப்படுத்தப்படும் தனித்துவமான சுற்றாடல் கல்வித் திட்டமாகும், இது சுற்றாடல் கூருணர்வுள்ள மற்றும் நாட்டின் மீது நேசம் கொண்ட அறிவுள்ள குடிமக்களை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வமாக முன்னேற்றுவதற்கும், இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்துடன் இணைந்து இத்தகைய முத்திரையை வெளியிடுவதற்கு மிகவும் சரியான நேரத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முத்திரை தொடர்பான சித்திரங்களை உருவாக்க சுற்றாடல் முன்னோடிகள் உள்ளிட்ட பாடசாலை அமைப்புக்குள் தெரியப்படுத்துவதில் விஜயா பத்திரிக்கை அளித்த பங்களிப்பும் தனித்துவமானது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெரிவிப்பதற்காக பல்வேறு சமய அறிஞர்கள் ஆற்றி வரும் பெரும் பணியை சமூகமயமாக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள சுற்றாடல் பற்றிய போதனைகள் இந்த சர்வமத புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த போதனைகளில் நிபுணரான தேசிய மதிப்புகள் ஊக்குவிப்பு நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்தி குலதுங்க பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வளங்களை வழங்கினார். இஸ்லாம் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பரீனா ருசைக், கிறித்துவ மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி தேசிய இறையியல் கல்லூரி விரிவுரையாளர் வண. கலாநிதி ஜயலத் பலகல்ல, இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் சிவபூமி அரும்பொருட் காட்சியகத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த சர்வ மத புத்தகம் முன்வைக்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நோக்கத்திற்காக இந்நாட்டு மக்களுக்கு அறிவூட்டுவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னின்று செயற்படவேண்டுமென கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுடன் இயற்கை வளங்களின் நாசகார அழிவுகளிலிருந்து எமது தாய் நாட்டை பாதுகாப்பதற்கு பாடசாலை முறைமையிலுள்ள சுற்றாடல் கல்வி திட்டத்தை மென்மேலும் சத்திமயப்படுத்துவதும் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோக ரீதியான சுற்றாடல் பாதுகாப்பு பணிகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.