LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 29, 2022

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் நடை பவனி

 கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் நடை பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நடை பவனியில் பாடசாலையில் மூத்த கல்வியலாளர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் 2002 உயர்தர மாணவர்களின் கேக் வெட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் கடமையாற்றி மரணித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடை பவனி கல்குடா வீதி வழியாக வாழைச்சேனை பிரதான வீதி, முல்லை வீதி, விநாயகபுரம் வீதி வழியாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய வீதி, பேத்தாழை மயான வீதி வழியாக பேத்தாழை கல்குடா வீதியினூடாக வருகை தந்து வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையினை வந்தடைந்தது.

குறித்த நடை பவனியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பான்ட் மாணவர்களின் வரவேற்புடன் கோலாட்டம், கரகாட்டம், சுளகாட்டம் என்பன இடம்பெற்றதுடன், பாடசாலையில் சாரணிய மாணவர்கள், சிப்பாய் படையணி மாணவர்கள், சுற்றாடல் பகுதி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ தலைவர்கள், ஆசிரியர்கள் சகிதம் பவனியாக கலந்து கொண்டனர்.

அத்தோடு 1998ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் தொடக்கம் 2021ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களினால் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டதுடன், இசை முழக்க பழைய மாணவர்களின் வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் நடனமாடி பழைய மாணவர்கள் நடை பவனியில் கலந்து கொண்டனர்.

குறித்த நடை பவனியினை பார்வையிடுவதற்கு பெரும்பாலான மக்கள் வீதியோரமாக நின்று பார்த்து மகிழ்ந்ததுடன், வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது பாடசாலையில் நடை பவனி என்பது குறிப்பிடத்தக்கது.




















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7