(ஜெ.ஜெய்ஷிகன்)
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் நடை பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நடை பவனியில் பாடசாலையின் 2005ம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2008ம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு காணப்பட்டது.
குறித்த பதாதையில் போதை தவிர், கல்வியால் நிமிர், நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உயிர், சிறுவர் தொழிலை மறு, கல்வி உரிமை கொடு, பாலியல் எனும் அரக்கனை அழி, மாணவர்களை காப்போம் இனி, தனியார் வகுப்புக்கள் எதற்கு? பாடசாலைக் கல்வியை உயர்த்து, அரசியலை நுழைத்து கல்வியை சிதைப்பதை நிறுத்து என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தி வந்தனர்.
பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன்கருதி பல்வேறு தரப்பினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை 2005ம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2008ம் ஆண்டு உயர்தர மாணவர்கள்முன்வைத்துள்ளனர்.