LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 27, 2022

மாற்றுத் திறனாளிகளை அனர்த்த காலங்களில் பாதுகாப்பதற்கான வழிகாட்டல் நூல் வெளியீடு!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை அனர்த்த காலங்களில் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான தந்திரோபாய வழிகாட்டல் நூல் வெளியீடு நேற்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.


மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கம் (YMCA) ஒழுங்கமைப்பில் USAID நிதி அனுசரனையில் மாற்று திறனாளிகளை எவ்வாறு அனர்த்த காலங்களில் பாதுகாப்பது என்பதை நூல் வடிவில் வெளியிடுவதற்கு கிழக்குமாகாண சமூகசேவைகள் திணைக்களமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து இன்று குறித்த நூலினை வெளியிட்டு வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கம் பொதுச் செயலாளர் எஸ்.பற்றிக் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளிகளுடன் தொடர்ச்சியாக சேவை செய்து வருகின்றோம் என்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் அறிவித்தல்கள் இல்லாமையினால்தான் கடந்த சுனாமி காலத்தில் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டது என சுட்டிகாட்டினார். இவ்வாறான அனர்த்தவேளையில் மக்களுக்கான விழிப்புனர்வை ஏற்படுத்துவதன் மூலம் மக்களை பாதுகாக்கலாம் என்பதற்காகவேதான் கைநூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், அம்பாறை மாவட்ட   மேலதி அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயத்த திட்டமிடல் பணிப்பாளர் சுனில் ஜெயவீர, யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள்,
மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7