அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவன் யோகேந்திரன் சதிஸ்காந் பழுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் இருபது வயதுக்குட்பட்ட பிரிவில் நூறு கிலோவிற்கு மேற்பட்ட பழுதூக்கல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் 1ம் இடத்தை பெற்று மாகாணத்திற்கும், மாவட்டத்திற்கும், பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பெருமையை வழங்கிய புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தியாலய மாணவன் யோகேந்திரன் சதிஸ்காந் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.