LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, August 12, 2022

மட்டக்களப்பு சிறைச்சாலை புதிய அத்தியட்சகர் நியமனம்

மட்டக்களப்பு சிறைச்சாலை வரலாற்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் சிறைச்சாலை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிராகரன் இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றிய இவர் அதே ஆண்டில் சுப்றா கிரோட்டில் சித்தியடைந்து பதவியுயர்வு பெற்று 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றியுள்ளார். அதன்பின்னர் சிரேஸ்ட தரத்தை சேர்ந்த இவர் 2020 ஆண்டு இலங்கையில் பெரிய சிறைச்சாலையான தும்பாறை மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகளில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிய பின்னர் 2021 களில் வவுனியா சிறைச்சாலையில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிவந்த நிலையில் நாளை 12.08.2022 திகதி முதல் மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7