LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 7, 2022

இரண்டாம் மொழி பயிற்சி நிறைவும் கலை விழாவும்

 அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் தமிழ் மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் 150 மணித்தியாளம் பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான இறுதிநாள் நிகழ்வு கல்குடா கல்வி வலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.எஸ்.கங்கேஸ்வரன், திருமதி.ஆர்.றிஸ்மியா பானு, கணக்காளர் வி.கணேசமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் எச்.எம்.பாறூக், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துஜோகாந், சிங்கள கற்கை நெறி ஆசிரியர்களாக எஸ்.தனலெட்சுமி, எஸ்.திலினி, கல்வி வலய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கல்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இப்பாடநெறியை பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது சிங்கள மொழியிலான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.



 













 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7