(ஜெ.ஜெய்ஷிகன்)
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை ஆறுமுகநாவலர் அறநெறிப்பாடசாலை, கல்மடு பூசலார் அறநெறிப்பாடசாலை, மருதநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறநெறிப்பாடசாலை மற்றும் முறாவோடை அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகங்களிலும், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை காகித ஆலை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்திலும் '' இயற்கையை நேசிப்போம் ஆளுக்கொரு மரம் நடுவோம்'' எனும் அறப்பணி சபையின் விசேட செயற்றிட்டத்திற்கு அமைவாக பயன்தரு மரங்கள் 06.02.2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நடுகை செய்யப்பட்டது.இந்நிகழ்வில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் செயலாளரும் கோறளைப்பற்று பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தருமான திரு.நே.பிருந்தாபன், ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச இணைப்பாளரும், கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார், கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளரும் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய அதிபருமான திரு.ச.வசந்தகுமார், கல்மடு கிராம உத்தியோகத்தர் திரு.கே.ஜெகதீஸ்வரன், கும்புறுமூலை கிராம உத்தியோகத்தர் திரு.ஜே.லோபனராஜ், கல்மடு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆலயநிர்வாகிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
ஆனந்தகிரி அறப்பணிசபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக தனது சேவையை விரிவுபடுத்தி கல்வி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, கலைகலாசார நிகழ்வுகளை நடாத்துதல், பொருளாளதார அபிவிருத்தி, இயற்கையை நேசித்தல், இளைஞர் - யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்துதல், இடர் நிவாரண உதவி முதலான செயற்றிட்டங்களை மாதம் ஒரு செயற்றிட்டம் எனும் அடிப்படையில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.