(க.ஜெகதீஸ்வரன்)
வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் சஞ்சிகை வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் திருமதி.ஷோபா ஜெயரஞ்சித், செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலாசார பேரவையின் ஏற்பாட்டில் 'இளம்பரிதி' சஞ்சிகையின் முதற்;பிரதி பிரதேச செயலாளரினால் உதவிப் பிரதேச செயலாளருக்கு வழங்கி வெளியீடு செய்யப்பட்டது.
இளம்பரிதி மற்றும் புதிய மழை சஞ்சிகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்களின் விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், இதன் பிரதிகள் பிரதேச கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணவர்களின்;, நடனங்கள், கும்மிப்பாடல்கள் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.