LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 13, 2021

வாழைச்சேனை - கும்புறுமூலை அருள்மிகு முனீஸ்வரர் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மாவட்ட மகாசிவராத்திரி விழா

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியம் நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழாவானது வாழைச்சேனை - கும்புறுமூலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய முன்றலில்  2021.03.11ம் திகதி இரவு 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செலயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள இந்து அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த மாணவர்வர்களின் கலைநிகழ்வுகளான நடனம், பரதநாட்டியம், நாடகங்கள், பேச்சாற்றலை வெளிப்படுத்தும் போட்டி நிகழ்வுகள், சைவசமய பொதுஅறிவு வினாவிடைப்போட்டிகள் மற்றும் சந்திவெளி தமிழ்சங்கம் பாரம்பரிய கலை மன்றம், சந்திவெளி சிவநர்த்தனா கலைமன்றங்களின் தமிழர்பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பறைச்சமர், பரதநாட்டியம் முதலான கலை நிகழ்வுகளும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன.


மேலும் இந்நிகழ்வில்  சிறப்பு சொற்பொழிவாளர்களாக சிவஸ்ரீ. வி.யோகநாதன் குருக்கள் (ரமணி ஐயா), பதினெண்சித்தர்பீடம், தமிழின குருபீடத்தின் முன்னாள் துணைத்தலைவர் திரு.ப.சனப்பிரியன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.  இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தரும், கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவருமான திரு.நே.பிருந்தாபன் , கலாசார உத்தியோகத்தர் திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார் மற்றும் அறநெறி ஒன்றியத்தின் நிர்வாகிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் இருந்து இவ்வாலயத்திற்கு வருகை தந்த  பக்த அடியார்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்வுகளை பார்த்து ரசித்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   வாழைச்சேனை - கும்புறுமூலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் சிவன் ஆலயத்தில் வருடாவருடம் கலைநிகழ்வுகளும், நான்குசாம  விசேட கிரியைகளும், அபிசேகங்களும் விசேட பூசைகளும் சிறப்பாக முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.



















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7