வாழைச்சேனை - பேத்தாழை அருள்மிகு வீரையடி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரால் இலண்டனில் வசிக்கும் திரு.சுப்பிரமணியம் நேசராசா அவர்களின் அனுசரணையுடன் அமரர்.மாசிலாமணி சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோறளைப்பற்று பிரிவிலே வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி வசதிகுறைந்த மக்களுக்கான தைப்பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு 13.01.2021ம் திகதி பி.ப 2.00 மணிக்கு ஆலய வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலய நிர்வாககிகள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார் மற்றும் இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்பொங்கல் பொதி வருடாவருடம் இலண்டனில் வசிக்கும் திரு.சுப்பிரமணியம் நேசராசா அவர்களின் அனுசரணையுடன் இவ்வாலய பரிபாலன சபையினரால் வழங்கிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.