(க.ஜெகதீஸ்வரன்)
தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிலமையினை கருத்திற்கொண்டு சமூக இடைவெளியை பேணும் வகையில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் 15.01.2021ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வருடம் கலாசார பண்பாட்டுப்பவனி மற்றும் கலை நிகழ்வுகளை தவிர்த்து பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதிவலம்புரி விநாயகர் ஆலயத்தில் விசேட அபிசேக பூஜையுடன் நிகழ்வு நடந்தேறியது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், கணக்காளர் ரி.ரூபாகரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார், இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.டுகேந்தினி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஒருதொகுதி வசதி குறைந்த மாணவர்களுக்கு வழங்கி வைப்பதற்காக கற்றல் உபகரணங்கள் பிரதேச செயலக கலாசார பிரிவினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.