கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -22.01.2021
(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் கீழ் உள்ள 13 பாடசாலைகளில் கல்விகற்கும் தாய் அல்லது தந்தையினை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 250 மாணவர்களுக்கான எழுதுகருவி வழங்கி வைக்கும் நிகழ்வானது 22 ஐனவரி 2021 அன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி நிகழ்வானது கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசசெயலாளர் திரு.எஸ்.கரன் அவர்களின் வழிநடத்தலின்கீழ் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.கா.அமலினி அவர்களின் இணைப்பாக்கத்தினூடாக கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஐயவதனன் அவர்களின் நேரடி கண்காணிப்புடன் அனுசரணையாளரான திரு.எஸ்.எம்.லோகராஐh மட்டக்களப்பு மற்றும் அவரின் மகள்மாரான கனடாவில் வசிக்கும் திருமதி.தேவப்பிரியா நிறஞ்சன் குடும்பத்தினர் மற்றும் லண்டனில வசிக்கும்; திருமதி.டீவாசினி பிரசாத் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் ஒரு மாணவருக்கு ரூபா 1000.00 பெறுமதியில் 250 மாணவர்களுக்கு திரு.எஸ்எம்.லோகராஐh அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.த.உமேஷ் மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.அ.அழகுராஐ; உடன் இணைந்து மாணவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் மற்றும் எழுது கருவிகளை வழங்கி வைத்துள்ளார்.
மட்.ககு. கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் மற்றும் எழுதுகருவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (75 மாணவர்கள் பயனாளிகளாவர்)
மட்.ககு.பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்
மட்.ககு.பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்
மட்.ககு.வம்மிவட்டவான் வித்தியாலய மாணவர்கள்