நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 392ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள், குவைத் மற்றும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 254 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 125 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில், கொரோனா தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.