LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, October 6, 2020

பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய

பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம்  என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஜனநாயகத்திற்கு இளைஞர்கள் தேவை இளைஞர்களிற்கு ஜனநாயகம் தேவை. தற்போது ஜனநாயகத்தை பற்றி பேசுபவர்கள் எங்களைப்போன்ற வயது முதிந்தவர்களாகவும் அல்லது காலாவதியானவர்களாகவுமே இருக்கின்றனர்.அதைபற்றி பேசுவதற்கு தேவையானவர்கள் இளைஞர்களே.
யேசுவும்,நபியும்,புத்தனும்,இளைஞர்களாக இருந்தபோதே தமது சமயப்பணிகளை மேற்கொண்டனர்.இந்துமதத்திலும் அவ்வாறு இருக்கிறது. இப்படியிருக்கும்போது இளைஞர்களினால் ஒன்றும் செய்யமுடியாது என்று எப்படி நாங்கள் கூறமுடியும்.
உங்களது இதயத்தில் ஜனநாயகம் சமத்துவம் தொடர்பாக தீப்பொறி ஒன்று எரிந்துகொண்டே இருக்கும். அவை ஒன்றிணைந்து எரிமலை சுவாலையாகும். அது வன்முறை எரிமலையாக மாறக்கூடாது. அது ஜனநாயகத்தை நோக்கிசெல்கின்ற அமைதியான எரிமலையாக மாறவேண்டும்.
எனவே இளைஞர்களை ஜனநாயகம் நோக்கி ஈர்த்தெடுக்கவேண்டும். அவர்களும் தங்களது பங்களிப்பை ஜனநாயகத்திற்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் .ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணசங்கங்களில் கூட  பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தினை நாம் காண்கின்றோம்.
பெரும்பாண்மையினரின் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடைபெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டிருப்பதே  மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்திருப்பதுடன், அந்தநாடுகள் முன்னேறமுடியாமல் தவிப்பதற்கும் காரணமாகின்றது.
உதாரணமாக 5 பேரைக்கொண்ட குடும்பத்தில் மூவர் சோற்றையும், இருவர் பாணையும் விரும்பி உண்பவர்களாக இருப்பர். அங்கு நாம் தேர்தலை நடாத்தினால் சோற்றினை விரும்புபவர்களே வெற்றி பெறுவர். ஆனால் பாண் உணவை விரும்பி உண்பவர்களின் விருப்பம் அங்கு மறுதலிக்கப்படுகின்றது.   ஆதலால் தேர்தலின் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை தேர்தெடுக்க முடியாது.
எனவே சிறுபாண்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம் எனலாம்.
அதுபோல மொழியையும் அதற்கு உதாரணமாக எடுக்க முடியாது.15 சதவீதமாக தமிழர்கள் வசிக்கும் இரத்தினபுரியில் சிங்களத்தில் மாத்திரம் சுற்றுநிருபங்களை அனுப்புவதும் அதுபோல, சிறுதொகையினராக உள்ள முல்லைத்தீவு வெலிஓயாவில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு தமிழில் கடிதங்களை அனுப்புவதும் சரியாகாது.
எனவே  நாம் ஆற்றும் ஒவ்வொரு பணியும் ரகசியமாகவும், அந்தரமாகவும் இல்லாமல் பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் இருக்கவேண்டும்.எமது கருத்துக்களில் பல்லினத்தன்மை இருக்கவேண்டும். இதற்காகவே தேர்தல் திணைக்களத்திற்கு பதிலாக தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டது.
அதன்மூலம் தனிநபரது கருத்துக்கு பதிலாக மூன்றுபேர் கொண்ட அங்கத்தவர் குழு நியமிக்கப்பட்டது. பல்வேறு பட்டவர்கள் இருக்கும் போதே பல கருத்துக்கள் வரும். ஒரு வர்ணத்தினால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது” என்றார்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7