தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை குறித்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் கடந்த 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு இறுதியாக கடந்த 16ஆம் திகதி குறித்த பகுதிகளில் மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.