நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 383ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்டவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இன்று 12 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக மூவாயிரத்து 245 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் 125 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.