வவுனியா, பன்றிகெய்தகுளம் பகுதியில், விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோதே துப்பாக்கிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, பன்றிகெய்தகுளத்தில் வீடொன்றில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை (இடியன்துவக்கு) மறைத்து வைத்திருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.