கனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 17ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பல மில்லியன் கனேடியர்கள் சுவாச நோயை சரிபார்க்க உள்ளூர் சுகாதார மையங்களுக்கு சென்றுள்ளனர்.
இதில், பரிசோதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 196,321 பேர் சாதகமான முடிவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்தமாக 2.2 சதவீதம் நேர்மறையானது என தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 760பேர் உயிரிழந்துள்ளனர்.