திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பகுதிகளைச் சேர்ந்த 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் தொழில் புரிந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டுள்ளதோடு அவருடன் தொடர்பை பேணிய 40 பேர் உட்பட 600 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.