(க.ஜெகதீஸ்வரன்)
வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் சமூக சேவை திணைக்களத்தின் மூலம் நிரந்தர கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாத நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 380 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் சமூக சேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.சஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொருளாதார ரீதியில் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு வை.எம்.சி.ஏ நிறுவனத்தினால் மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.