(ஜெ.ஜெய்ஷிகன்)
கொவிட்-19, தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர வருமானம் எதுவும் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வை.எம்.சீ.ஏ, மட்டக்களப்பு நிறுவனத்தினூடாக 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5000 மாற்றுத்திறனாளிகளுக்கு 3000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கான வவுச்சர்களை உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரிடம் வை.எம்.சீ.ஏஇ மட்டக்களப்பு நிறுவனத்தின் செயலாளர் ஜெகன் ஐPவராஜ் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை செயலகப் பிரிவின் செயலர் கோ.தனபாலசுந்தரம் மற்றும் உதவிப் பிரதேச செயலர் திருமதி.நிருபா பிருந்தன்இ பதில் சமூகசேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளி அமைப்பின் தலைவர் ச.சஐந்திரன் ஆகியோரிடம் வை.எம்.சீ.ஏ அமைப்பின் இணைப்பாளர் பற்றிக் மற்றும் கள இணைப்பாளர் சுவேந்திரன் ஆகியோர் பொதிகளுக்கான வவுச்சர்களை கையளிப்பதை காண்க.
ஏனைய பிரதேச செயலகங்களிற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதை படங்களில் காண்க.