மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 88 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றுவரை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அந்தப் பெண்ணின் தொழிற்சாலையில் பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 2 ஆயிரம் பேருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.