UPDATE 02: நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 918 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் இந்தியா, பஹ்ரைன், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 11 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 918ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 188 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 79 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.