இந்தக் கருத்தமர்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் குறித்த கருத்தரங்கும், செயலமர்வும் இடம்பெற்றதுடன் இதன்போது, சட்டத்தரணி சர்மிளா சட்ட ஆலோசனைகளையும் விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கியிருந்தார்.
இதன்போது, பாலியல் இலஞ்சம், பாலியல் சுரண்டல், விவாகரத்து, தாபரிப்பு, வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என 150 பேர்வரை பங்கு கொண்டு பயன்பெற்றனர்.