பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ தங்கள் குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
பிரதமரின் அலுவலகம் இப்போதைக்கு, ட்ரூடோவின் மூன்று குழந்தைகள் வகுப்பில் கற்றல் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியது.
ட்ரூடோவின் குழந்தைகள் அனைவரும் ஒன்றாரியோவில் உள்ள பொதுப் பாடசாலையில் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பழமைவாதக் கட்சித் தலைவர் எரின் ஓ’டூலும் அவரது மனைவியும் தங்கள் இரு குழந்தைகளையும் மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.