இந்தியாவில் இருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3104 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2889 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 203 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.