கிழக்கு கடல் பிராந்தியத்தில் தீப்பற்றி எரிந்துக் கொண்டுள்ள கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் இருந்து இதுவரை 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் இன்று காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணிகளுக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.