LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, August 4, 2020

அரசியலமைப்புப் பேரவையின் தலைவராக முன்னாள் சபாநாயகர் வழங்கிய சேவைக்குப் பிரதமர் பாராட்டு

அரசியலமைப்புப் பேரவையின் 82வது கூட்டம் இன்று மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது
ஆரம்பத்தில், அரசியலமைப்பின் உறுப்பினர்களை வரவேற்ற அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர், மிகவும் வேலைப்பழு நிறைந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ளமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இதன் பின்னர், பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து அரசியலமைப்பு பேரவை கவனம் செலுத்தியிருந்ததுடன், இவற்றை நிரப்புவது குறித்த இறுதித்தீர்மானத்தை அடுத்த கூட்டத்தில் எடுப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.
அத்துடன், நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலாண்டு அறிக்கைகள் பற்றியும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கலாநிதி தீபிகா உடுகம வழங்கியுள்ள இராஜினாமாக் கடிதம் குறித்து அவதானம் செலுத்தியிருந்த அரசியலமைப்புப் பேரவை, மனித உரிமைகள் ஆணைக்குழுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும் பாராட்டியிருந்தது.
மனித உரிமை ஆணைக்குழு உலகில் மிகவும் சிறந்த ஆணைக்குழுக்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் உடுகம, அரசியலமைப்புப் பேரவைக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் குறிப்பிடுகையில், அரசியலமைப்புப் பேரவையின் தலைவராகப் பங்கேற்கும் இறுதிக் கூட்டம் இதுவென்றும், இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சகல தரப்பினரினதும் கருத்துக்களைப் பெற்று அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே சகல தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கௌரவ கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார். தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் எந்தவிதமான கருத்துவேறுபாடுகளும் இன்றி ஏகமனதாக முடிவுகளை எடுக்கக் கிடைத்தமை குறித்தும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை வினைத்திறனாகவும், உரிய காலத்திலும் நடத்துவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புத் தொடர்பிலும் தலைவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கிய ஒத்துழைப்புக் குறித்து சகல சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் அவர் நன்றிகளை வெளியிட்டார்.

8Shares


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7