2020 பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 73.5 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு முடிவுற்ற நிலையில் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி 288868 மொத்த வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
இதில் சேருவில தொகுதி- 80912, திருகோணமலை தொகுதி -97065, மூதூர் தொகுதி -110891 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்களும் 44 வாக்கெண்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களுமாக 189 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.