இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் 5 வருடங்களுக்கு யார் ஆட்சிமைக்கப் போகிறார்கள் என்பதற்கு மக்கள் ஆணை வழங்கும் தினமாகும்.
பெரும்பாலான மக்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளால் நாம் பாரிய வெற்றியடைவோம். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.