குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நாரஹேன்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்கின் துப்பாக்கியை பொறுப்பேற்றமை தொடர்பான சாட்சியை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைதாகியிருந்தார்.
தற்போது, அவரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.