அல்பர்ட்டாவில் உள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் போது, ஊழியர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என நம்பப்படுகின்றது.
4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மாகாண அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதலின் கீழ் செப்டம்பர் மாதத்தில் வகுப்புக்கு திரும்பும்போது பொதுவான பகுதிகளிலும் பாடசாலை பேருந்துகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கல்வித் துறை அமைச்சர் அட்ரியானா லாக்ரேஞ்ச் மற்றும் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் தீனா ஹின்ஷா ஆகியோர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மழலையர் பாடசாலை முதல் தரம் 3 வரை உள்ள மாணவர்களுக்கு முகக்கவசம் பயன்பாடு விருப்பத்தைப் பொறுத்து இருக்கும்.
கூடுதலாக, தற்போதைய மருத்துவ சான்றுகள் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயதான குழந்தைகள் அல்லது பெரியவர்களை விட கொவிட்-19 தொற்றை கடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க முடியாதபோது, முகக்கவசங்கள் பயன்பாட்டை கடுமையாக பரிந்துரைக்கிறது என்று மாகாணம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது.
மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர், ஆசிரியர் மற்றும் பணியாளர் உறுப்பினர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படும்.
ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பப்படி பயன்படுத்த ஒவ்வொரு முகக்கவசமும் வழங்கப்படும். ஒற்றை பயன்பாட்டு முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பு மற்றும் தொடர்பு இல்லாத வெப்பமானிகள் ஆகியவை மாகாணத்தால் வழங்கப்படும்.
லாக்ரேஞ்சின் கூற்றுப்படி, மாகாணம் 10 மில்லியன் டொலர்களை புதிய விநியோகங்களுக்காக செலவிடுகிறது. கூடுதலாக 120 மில்லியன் டொலர் நிதி அதிகரிப்புக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.