தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன், நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்களை கடும் நெருக்கடியான சூழ்நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்கிறார்.
இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் தம்மோடு ஓன்றிணையவிட்டாலும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கட்சியுடன் இணையுங்கள் என்று அவர்களுக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
வெறுமனே மக்களுக்கு முன்பாக நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒன்ன்றிமையாக பயணிக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.