பருத்தித்துறை கடற்பரப்பில், கடற்படையினர் இன்று (புதன்கிழமை) அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான பொதிகள் கடலில் மிதந்து வந்ததை அவதானித்துள்ளனர்.
இதன்போது, கஞ்சா பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட கஞ்சா போதைப் பொருட்கள் 294 கிலோ எடை உடையவை என கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த கஞ்சா பொதிகள் அனைத்தும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரனை முன்னெடுக்கப்படுகிறது.