இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓகஸ்ட் 4ஆம் திகதி மற்றும் வாக்களிப்பு நாளான ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெறமுடியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரையில் 99 சதவீதமான வாக்குச் சீட்டுகள் உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்