LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, August 12, 2020

மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றது – செல்வம்

மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றதுடன், எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள் என உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா கற்குழிபகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சநத்திப்பில்கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள்.தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள்.

எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமைகொடுத்திருப்பதை பார்க்கமுடிகின்றது.

போரினால் பாதிக்கபட்ட மக்கள் அதனை எதிர்பார்பது தவறில்லை.ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோதுதான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.எனவே இந்த சூழலைவன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலானவிடயம்.

ஏனெனில் பெரும்பாண்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவை எமக்கு சவாலாகஇருக்கபோகின்றது. எனவே நாங்கள்தூங்கமுடியாது.எமது மண்ணைகாக்கின்ற பொறுப்பு எம் தலைமேலேசுமத்தப்பட்டிருக்கின்றது.

எங்களைப்பொறுத்தவரை காணமல்போனோர் மற்றும் அரசியல்கைதிகள் விடயங்கள் முக்கியமானது.அது எமக்கு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.இந்தவிடயங்கள் கவனத்தில் எடுக்கப்படும்.அதற்கான அழுத்தங்கள்கொடுக்கப்படும்.

தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில்இருந்தும் பலர் விமர்சித்தார்கள்.எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாகபயன்படுத்தி சிங்களகட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள்.

எனவே மக்களின்விடுதலை என்று பேசுகின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து நாடாளுமன்றத்தில் ஒரு குழுவாக செயற்படும் முயற்சியை நாம் எடுக்கவுள்ளோம்.அதிலே வரக்கூடியவர்கள் வரலாம். அதற்கான பேச்சுக்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றது.மக்கள் எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள்.அதனை இனியும் உணரவில்லையாயின் கூட்டமைப்பை கடவுளாலும் காப்பாற்றமுடியாது. எனவே மக்களுக்கான முழுநேரபணியாளர்களாக நாம் இருப்போம். எதை செய்யவேண்டும் என்று எமக்கு நீங்கள் கட்டளையிடுங்கள் ” என்றார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7