நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட அமோ வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய அவர் இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் கைகொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் 245 ஆசனங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.